Recent Posts

சிவசித்தன்

திருமந்திரம்

Wednesday, March 23, 2011

திருமந்திரம் 725


உடம்பினை முன்னும் இழுக் கென்றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்

றுடம்பினை யானிருந் தோம்புகின்றேனே.

எவ்வளவு அழகாக, அழுத்தமாக, ஆணித்தரமாக இங்கு சித்தர் நெறி பேசப்படுகிறது. அதுவும் திருமுலர் பிரானால்.

மாந்தர்களே! உங்களைப் போல் நானும் இந்த உடல் ஓட்டைப் பாண்டம் ஒன்றுக்கும் உதவாதது என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த உடம்புக்குள்ளேதான். இறைவன் இருக்கிறான் என்பதைக் கண்டுகொண்டேன்.

உடலே கோயில்! உள்ளுறையும் சீவனே சிவன்! என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் உடலை மிகவும் அக்கறையோடு பாதுகாக்கத் தொடங்கி விட்டேன் என்று உற்சாகத்தோடு கூறுகிறார்.

ஓம்

ஓம் என்ற பிரணவ ஒலி உலகத்தின் முல ஒலி ஆகும். அ. உ. ம். முன்றும் சேர்ந்து ஓம் என்பர். அ. சூரியன், உ. சந்திரன், ம். அக்கினி ஒளிமயமான எஅ நாதம், உ விந்து, ம் கலை, நாத விந்து கலைகளின் தொகுப்பே ஓம் என்றும் கூறுவர். அ. கிரியா சக்தி (பிராமி), உ. இச்சா சக்தி (வைணவி), ம். ஞானசக்தி (ரௌத்ரி) என்பது சித்தர் கருத்து.

சித்தர்

சித்தர்

பராபரத்தில் பரம், பரத்தில் சிவம், சிவத்தில் சக்தி, சக்தியிலிருந்துதான் பஞ்ச பூதம் உள்ளிட்ட அனைத்தும் தோன்றியது. இந்த சிவன் தான் சித்தன் எனவும் கூறப்படுவதுண்டு.

சித்தர் வழி தனி வழி ! யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்ற உயரிய நோக்கு அவர்களுடையது. சித்தர்களின் விடா முயற்சியும், உழைப்பும், தன்னலமற்ற பணியும் நமக்கு எப்போதும் வேண்டும் வேண்டும்.

சீவனே சிவன் என்று துணிவதே சித்தர் தம் மதம்.

சித்தர் தம்மைக் காலங்கடந்தவராகக் கூறிக் கொளல் மிகையும் அன்று. பொய்யும் அன்று.

சித்தம் என்பது புத்தி, மனம்,
சித்து புத்தியால் ஆகிற காரியம்
சித்தர் புத்தியைக் கட்டுப்படுத்தியவர்.

ஞானப் பாடல்

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!

தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

மாசற்ற கொள்கை மனத்தில் அடைந்தக்கால்
ஈசனைக் காட்டும் உடம்பு - அவ்வை

உடம்பினால் ஆய பயனாதலின்
உடம்பினுள் உத்தமர் காண் -அவ்வை

உடம்பினை முன்னும் இழுக் கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்
றுடம்பினை யானிருந் தோம்புகின்றேனே.

தேடிக் கண்டு கொண்டேன் திருமாலோடு நான்முகனும்
தேடிக் காணாத தேவனை என்னுள்ளே கண்டு கொண்டேன்

தவம்செய்வார் தம்கருமம் செய்வார் - மற்றல்லார்
அவம் செய்வார் ஆசை உட்பட்டு