Recent Posts

சிவசித்தன்

பஞ்சபூதங்களின் குணங்கள்

Sunday, February 20, 2011

பஞ்சபூதங்களின் குணங்கள்

மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற விகிதத்தில் இருக்கின்றனவென்று மேலே குறிப்பிடப் பட்டது. இதன் அடிப்படையில் மருந்துப் பொருள்கள் கூட்டப் படுகின்றன என்பது கருதத்தக்கது.

1. இனிப்பு = மண் + நீர்

2. புளிப்பு = மண் + தீ

3. உவர்ப்பு = நீர் + தீ

4. கைப்பு = காற்று + ஆகாயம்

5. கார்ப்பு = தீ + காற்று

6. துவர்ப்பு = மண் + காற்று

என, சுவைகளில் ஐம்பூதங்கள் கலந்திருக்கின்றன.

பஞ்சபூதம்

பஞ்சபூதமும் உடம்பும்

உடம்பை ஆட்சி செய்வது பஞ்ச பூதமாகும். பஞ்சபூதம் அளவில் ஒன்று மாறினாலும் உயிர்க்குக் கேடு வந்து நேரும் என்பது சித்த மருத்துவக் கோட்பாடு

அண்டத்தில் இயங்குகின்ற ஆற்றல்கள் அனைத்துக்கும் இதே நிலைமைதான் என்றும் பொதுவிதி கூறப்படுகிறது. அண்டத்துக்கு வேறு, பிண்டத்துக்கு வேறு என்னும் பாகுபாடு இயற்கை நியதியில் இல்லை என்பதை உணர்த்துவது சித்த மருத்துவக் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்து என்பதை,

"" அண்டத்தி லுள்ளதே பிண்டம்

பிண்டத்தி லுள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமும் ஒன்றே

அறிந்துதான் பார்க்கும் போதே''
தன்னை அறிவதே, உண்மையான அறிதல்


வாழ்க்கையின் நெடுகே நாம் அறிந்து கொள்வது எல்லாமே அறிதல் என்னும் வரையறைக்குள் வந்தாலும் , அறிவறிதலில் தலையாயதும், நிலையாயதும், உண்மையானதும் தன்னை அறிதலே ஆகும்.

சித்தர்களும் இதையே முதன்மை படுத்தி சொல்கிறார்கள், இவர்களே இதை முதன்மை படுத்தி சொல்லும் போது தன்னை அறிதல் என்பதைத் தவிர்த்த அறிதல்கள் எதுவும் பெரியதாகாது, இதையே திரு மூலர்,

"என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்"

என்றும்,

"தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுக்கிறான்"

என்றும்,

"தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையை பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த சிவனருளாலே"

எனச் சொல்கிறார் திருமூலர்.

இதையே சிவவாக்கியார்,

"என்னிலேயிருந்த ஒன்றையறிந்த தில்லையே
என்னிலேயிருந்த ஒன்றை யறிந்து கொண்டபின்
என்னிலேயிருந்த ஒன்றை யாவர் காணவல்லரே
என்னிலேயிருந்த ருந்திருந்து யாதுணர்ந்து கொண்டேனே"

என்கிறார். ஆக , சித்தர்கள் எல்லோரும் மனிதனாய் பிறந்தவன் அறியவேண்டியதில் முதன்மையானது, தன்னை அறிவதே என்கிறார்கள்.

பட்டினத்தார்

இரை வயிற்றுக்கு
இறை உள்ளத்திற்கு.....

"நாட்டம் என்றே இரு! சற்குரு
பாதத்தை நம்பு பொம்மல்
ஆட்டம் என்றே இரு! பொல்லா
உடலை: அடர்ந்த சந்தைக்
கூட்டம் என்றிரு சுற்றத்தை
வாழ்வைக் குடம் கவிழ் நீர்
ஓட்டம் என்றே இரு நெஞ்சே
உன்னக்குபதேசம் இது."

- பட்டினத்தார் -

"உண்டென்றிரு தெய்வம் உண்டென்
றிரு உயர்செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம்
பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடுநீங்காம
லே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கு
உப தேசம் இதே"

- பட்டினத்தார் -

"யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே"